தனுஷின் முதல் படமான `துள்ளுவதோ இளமை’ வெளியான நாளான நேற்று (10மே 2002), ரசிகர்கள் தனுஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுருக்கிறார் தனுஷ்.
அதில், “வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் ..நண்பர்களுக்கும் ..முக்கியமாக ..எனது உயிர் ரசிகர்களுக்கும் ..என் உள்ளம் கனிந்த நன்றி” .என கூறியிருக்கிறார்.
வாழ்த்திய அனைத்து
உள்ளங்களுக்கும் ..
நண்பர்களுக்கும் ..
முக்கியமாக ..
எனது உயிர் ரசிகர்களுக்கும்
என் உள்ளம் கனிந்த நன்றி .— Dhanush (@dhanushkraja) May 11, 2020
தனுஷ்அதிக திறமை கொண்டவராகவும் மற்றும் தனது மாறுபட்ட நடிப்பால் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்ற கதாயாயகனாகவும் வலம் வருகிறார். 18 ஆண்டுகளுக்கு முன்பு ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் வெளியீட்டின் மூலம் சினிமா உலகில் தனது பயணத்தைத் தொடங்கிய நாள் என்பதால், தனுஷுக்கு நேற்று ஒரு சிறப்பான நாளாகும். தொழில்துறையின் பிரபலங்கள், தனுஷின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சனிக்கிழமை முதலே சமூக வலைதள பக்கங்களில் அவரைப் பாராட்டினர். மேலும், பல பிரபலங்கள் சேர்ந்து அவரது Common DP-ஐ வெளியிட்டனர்.