தமிழ் சினிமாவில் ‘சக்கரகட்டி’ திரைப்படம் மூலம் கால் பதித்தவர் நடிகர் சாந்தனு. இவர் பிரபல இயக்குனர் கே.பாக்கியராஜ் அவர்களது மகன். தற்போது தளபதி விஜய் யுடன் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மனைவி கிகி விஜய் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக உள்ளார். ஊரடங்கு நேரத்தில் இவர்கள் இருவரும் ‘டிக் டாக்’கில் செய்த அனைத்து வீடியோகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இ
இந்த நிலையில் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி இணைந்து ‘லவ் வித் சாந்தனு அண்ட் கிகி’ என்ற பெயரில் புதிய யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர். பல சுவாரசியமான வீடியோக்களை இந்த சேனலில் அவர்கள் பதிவேற்ற இருப்பதாக கூறியுள்ளனர். அதற்காக அந்த சேனலை சப்ஸ்கிரைப் (சுபசுகிரிபே) செய்யுமாறு சாந்தனு கூறி உள்ளார்.
மேலும் கடைசியில் என்னையும் இப்படி சொல்ல வச்சுட்டாங்களே மா என பீல் பண்ணுகிறார். இதனை பார்த்து கிகி ஏய் ச்சீ போ என கலாய்கிறார்.
#WithLoveShanthnuKiki
A new YouTube channel .. coming soon with interesting videos 😊@KikiVijay pic.twitter.com/9XTd6UqkT2— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) May 10, 2020