V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷ் நடித்த படங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை செய்த பட்டாஸ்

தனுஷ் நடித்த படங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை செய்த பட்டாஸ்

தனுஷ் நடித்த படங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பில் சாதனை செய்த பட்டாஸ்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. கடந்த மே மாதம் முதல் தேதி பல மொழிகளிலும் முதல் முறையாக தொலைக்காட்சி ஓ.டி.டி. முறையில் ஒளிபரப்பான் பட்டாஸ் திரைப்படம் மாபெரும் சாதனை செய்திருக்கிறது. 13149 000 என்ற எண்ணிக்கையைத் தொட்டு, தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்த்த படம் என்ற சாதனையையும் பட்டாஸ் நிகழ்த்தியிருக்கிறது. குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுதுபோக்குப் படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் தொடர்ந்து வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு இந்த நிறுவனத் தயாரிப்பில் வெளியான அஜித் குமார் நடித்த விஸ்வாசம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் 18.2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. அந்த வாரம் ஒளிபரப்பான் ஐபிஎல் போட்டிக்கு கிடைத்த பார்வையாளர்களைவிட இந்த எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. இதேபோல் இந்த நிறுவன குடும்பத்தைச் சார்ந்த மற்றொரு நிறுவனத் தயாரிப்பான பாஷா படம் 2000 ஆண்டு சன் தொலைக் காட்சி ஒளிபரப்பில் இமாலய சாதனையை நிகழ்த்தியிருப்பது இங்கு குறிப்படத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறுகிறார்….

எந்த வகைப் படம் என்றாலும் குடும்பம் முழுமைக்குமான தரமான பொழுது போக்கு என்பதுதான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தாரக மந்திரம். சர்வதேச ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமான நல்ல படங்களைத் தர வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். மேலும் பட்டாஸ் படத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் அற்புதமாக நடித்திருந்தது படத்தின் சிறப்பம்சமாக அமைந்ததுடன், அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இந்த வெற்றிச் சாதனையை எங்களுக்கு பரிசாகக் கொடுத்த பட்டாசு படத்தில் நடித்த நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்புக் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Most Popular

Recent Comments