கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இருக்கும் ஊரடங்கு உத்தரவினால் பெரிதும் பாதிக்கப்பட்டள்ளது தமிழ் சினிமா. இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஹரி தான் அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணையும் அருவா படத்திற்காக பேசப்பட்ட தன்னுடைய சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பால் தமிழ் சினிமா மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய ‘தயாரிப்பாளர்கள்’ நன்றாக இருந்தால் தான் நம் ‘தொழில்’ மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும். இந்த சூழலை மனதில் கொண்டு நான் அடுத்ததாக இயக்கும் அருவா படத்தின் சம்பளத்தில் 25% குறைத்து கொள்கிறேன்” என கூறியுள்ளார். தயாரிப்பாளர்களின் நலன் கருதி சம்பளத்தை குறைத்துக் கொண்ட முதல் இயக்குநர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய ‘தயாரிப்பாளர்கள்’ நன்றாக இருந்தால்தான் நம் ‘தொழில்’ மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும்.. #அருவா படத்தின் சம்பளத்தில் 25% குறைத்துகொள்கிறேன்.. இயக்குநர் #ஹரி அறிக்கை. சம்பளத்தை குறைத்துக் கொண்ட முதல் இயக்குநர். #aruva #directorhari pic.twitter.com/gYNg4ZcFc5— Johnson PRO (@johnsoncinepro) May 7, 2020