V4UMEDIA
HomeNewsKollywoodமாநாடு படத்திற்காக சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகர் உதயா !

மாநாடு படத்திற்காக சம்பளத்தை குறைத்து கொண்ட நடிகர் உதயா !

கொரோனா லாக் டவுன் தமிழ் சினிமாவை மொத்தமாக புரட்டி போட்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. தன்னை நம்பி திரைப்படங்கள் தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி விட்டார். விஜய் ஆண்டனியை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி போன்ற பிரபலங்களும் 25% சம்பளத்தை குறைத்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் உதயா “மாநாடு” படத்திற்காக பேசப்பட்ட சம்பளத்தில் 40% குறைத்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வணக்கம் ! தற்போது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரானா வைரஸின் தாக்கத்திலிருந்து நிச்சயம் மீண்டும் வருவோம்.மற்ற அனைத்து துறைகளை விட நம் திரையுலகம் இந்த Corona வைரஸால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது .. நம் முதலாளிகள் அனைவரும் நன்றாக இருந்தால்தான் இந்த ஒட்டுமொத்த திரையுலகமும் நன்றாக இருக்கும்.நான் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் “அக்னி நட்சத்திரம்”திரைப்படத்தில் தயாரிப்பாளரின் நலன் கருதி மிகக்குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருக்கிறேன்… தற்போது இந்த கொரானாவின் தாக்கத்தால்… ஒட்டுமொத்த திரைஉலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் … நான் மீண்டும் தயாரிப்பாளருக்கு உதவிடும் வகையில் நான் ஒத்துக் கொண்ட சம்பளத்திலிருந்து மீண்டும் தற்போது 40% சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன். அதேபோல் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கும் “மாநாடு”படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் அந்த படத்திலும் எனக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்திலிருந்து 40% சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதிக்கிறேன். இதற்கு முன்னோடியாக இருந்த நடிகர் விஜய் ஆண்டனி , ஹரிஷ் கல்யாண்,இயக்குனர் ஹரி போன்றோர் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்க அதே போல் நானும் எனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதில் பெருமைகொள்கிறன். நன்றி” என கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments