Money Heist வெப் தொடர் சில வாரங்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்தது. ஸ்பானிஷ் மொழியில் உருவான இந்த வெப் சீரியஸ் உலக அளவில் மெகா ஹிட் அடித்திருக்கிறது. இதில் இடம்பெற்ற ப்ரொபஸ்ஸோர் (PROFESSOR) கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த Professor தலைமையில் 8 கொள்ளைக்காரர்கள் சேர்ந்து வங்கியில் கொள்ளை அடிப்பதுதான் கதை. சிம்பிளான கதை தான் ஆனால் அதற்கு அவர்கள் எழுதிய திரைக்கதை தான் அனைவராலும் ரசிக்க வைக்கிறது.
இத்தொடரின் இயக்குனர் அலெக்ஸ் ரோட்ரிகோ அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அதில் இந்திய திரை நட்சத்திரங்களில் யார் Professor கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கேட்டதற்கு, “தளபதி விஜய்” சரியாக இருப்பார் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பெர்லின் கதாபாத்திரம் ஷாருக் கானுக்கும், பொகோட்டா கதாபாத்திரம் அஜித்துக்கும், டென்வர் கதாப்பாத்திரம் ரன்வீர் சிங்கிற்கும், தமாயோ கதாப்பாத்திரம் மகேஷ் பாபுவுக்கும், சுவாரஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கும் சரியாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Director of #MoneyHeist! He himself selects #ThalapathyVijay will be apt for professor role🔥 #Master @Actorvijay 😎 pic.twitter.com/deYydDlufx— Online Thalapathy Fans Club (@OTFC_Off) May 7, 2020