கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாமல் உள்ளன. ஷூட்டிங் நடந்தால் தான் தினசரி வருமானம் மற்றும் உணவு என இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தயாரிப்பாளர்களும் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டும் என்ற சிக்கல் வேறு.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்த் தயாரிப்பாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடித்து முடித்துள்ள மூன்று படங்களுக்கு ஒப்புக்கொண்ட சம்பளத்தில் இருந்து 25% சதவீதம் குறைத்திருக்கிறார் (ஒரு கோடி ரூபாய் அளவில்). இதற்காக அவருக்கு திரைத்துறையில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
நடிகர் ஹரிஷ் கல்யாண் இது குறித்து தனது சமூக வலைத்தளங்களில் ட்வீட் செய்துள்ளார். அதில் “வாழ்த்துக்கள். இதைச் செய்வது மிகப் பெரிய விஷயம். நானும் இதைத் தொடரவுள்ளேன்” என கூறியுள்ளார்.