சுந்தர்.சி இயக்கிய ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, தளபதி விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்தார். இவரது நடிப்பில் வெளியான அருந்ததி, தெய்வதிருமகள், பாகுபலி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தயாராகியுள்ள சைலன்ஸ் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் 3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அதற்காக அனுஷ்கா நன்றி தெரிவித்துள்ளார். அதில் “உங்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நன்றி ! நீங்கள் பாதுகாப்புடன் வீட்டில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
















