Home News Kollywood தளபதி விஜய் யுடன் முதன்முறையாக இணையும் இசையமைப்பாளர் தமன் ! உறுதியானது மெகா கூட்டணி

தளபதி விஜய் யுடன் முதன்முறையாக இணையும் இசையமைப்பாளர் தமன் ! உறுதியானது மெகா கூட்டணி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் தளபதி விஜய் யின் 64வது படமாகும். தளபதி விஜய் யின் அடுத்த படமான “Thalapathy65” யார் இயக்க போவது என தமிழ் சினிமாவில் பெரும் போட்டியே நடைபெற்றது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் அடுத்த படத்தை இயக்க போகிறார் என நம்புதகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்துக்கு இசையமைப்பாளராக தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் கமிட் ஆகி உள்ளதாக சொல்லப்படுகிறது.


இது பற்றி அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில், தமன் நேற்று ஒரு தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். நிருபர் கேட்ட கேள்விக்கு “ஆம், தளபதி விஜய் படத்திற்கு இசையமைக்கிறேன். அதற்காக மிக உற்சாகமாக இருக்கிறேன். கிட்டத்தட்ட மூன்று வருடமாக இதற்காக பாலோ அப் இருந்தது. தற்போது தான் சரியான நேரம் வந்துள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது” என தமன் கூறியுள்ளார். தளபதி விஜய் யுடன் இசையமைப்பாளர் தமன் இணைவது இதுவே முதல் முறையாகும்.

Here’s the official confirmation from @MusicThaman about #Thalapathy65 in yesterday’s live session 🔥#Master @actorvijay pic.twitter.com/QhuImlLM4k— Vijay Fans Trends (@VijayTrendsPage) May 6, 2020