லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனனுக்கு டப்பிங் பேசியவர் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகையுமான ரவீனா. ரவீனா கிடாயின் கருணை மனு படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் மற்றும் அவரது நடிப்பில் “காவல்துறை உங்கள் நண்பன்” ரிலீஸிற்கு தயாராக உள்ளது. இவர் ஏற்கனவே கத்தி, அடங்கமறு, அயோக்கியா, ஐ போன்ற பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தளபதி விஜய் சில காட்சிகளில் துணிந்து நடித்துள்ளார். எப்படி இதில் எல்லாம் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. இவ்ளோ பெரிய மாஸ் ஹீரோ இந்த ரோலில் நடித்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது” என கூறியுள்ளார்.