பிட்ஸா, ஜிகர்தாண்டா, இறைவி, பேட்ட என பல ஹிட் படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். பேட்ட படத்திற்கு பின் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை இயக்கி உள்ளார். படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் ப்ரோடுக்ஷன் நிறுவனம் மூலமாக மேயாத மான், அவியல், கள்ளசிரிப்பு என பல தரமான படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ஜெய்யை வைத்து புதிய வெப் தொடர் ஒன்று தயாரித்துள்ளார். சென்னை 28, சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் நடித்துள்ள ஜெய் வெப் தொடரின் பக்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்த தொடரை கார்த்திக் சுப்புராஜ் உதவியாளர் சாருகேஷ் இயக்கியுள்ளார். ஜெய்க்கு ஜோடியாக “ஓ மை கடவுளே” படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த வாணி போஜன் நடித்துள்ளார்.