கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் பாரதிராஜா தனிமை படுத்தப்பட்டுள்ளார் என சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை மறுத்த பாரதிராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
“சென்னையில் இருந்து காரில் தேனிக்கு எனது தங்கையை பார்க்க சென்றேன். தங்கை பார்த்து விட்டு தற்காப்பு கருதி மருத்துவர்களிடம் பரிசோதித்து கொண்டேன். அங்கு என்னை பரிசோதித்த மருத்துவர்கள் தொற்று இல்லை என உறுதி செய்துள்ளனர். இதுவரை சென்னை, தேனி என மூன்று முறை பரிசோதித்து கொண்டேன், ஆனால் தொற்று இல்லை என்று தெரிவித்து விட்டனர். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை” என கூறியுள்ளார்


























