தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் மே 03 வரை சுமார் 40 நாட்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. மே 04 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மே 07 முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், சென்னையில் மட்டும் மதுபான கடைகள் திறக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளனார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை கண்டித்து தனது சமூக வலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் “கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு” என குறிப்பிட்டுள்ளார்.
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம்.
அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.— Kamal Haasan (@ikamalhaasan) May 5, 2020
















