தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. 2013ம் ஆண்டில் மெட்ராஸ் கேப் என்ற பாலிவுட் படம் மூலம் சினிமா உலகில் நுழைந்தார். அதன்பின் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவரது நடிப்பில் வெளியான “ஜெய் லவா குசா, தோளி பிரேமா” படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. பின் தமிழ் சினிமாவில் “இமைக்கா நொடிகள்” மூலம் கால் பதித்தார்.
இவரது நடிப்பில் தமிழில் வெளியான “இமைக்கா நொடிகள், அயோக்கியா, அடங்கமறு, சங்க தமிழன்” ஹிட்டாகின. இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் தமிழில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு “தளபதி விஜய் சார்” என கூறியுள்ளார்.
Thalapathy Vijay sir! https://t.co/3FkqXHOyEK— Raashi (@RaashiKhanna) May 3, 2020