கொரோனா வைரஸ் காரணத்தால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், சமூக ஆர்வலர்கள்,சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என தங்களால் முயன்ற நிதியுதவியை அரசாங்கத்துக்கும், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
அகில இந்தியத் தனுஷ் ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் சுப்பிரமணிய சிவா மற்றும் ராஜா அவர்களின் ஆலோசனைப் பேரில் ஏழை எளியோர் மக்களுக்கு விழுப்புரம் மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக தொடர்ந்து இன்று 14 நாளாக இரவு உணவு வழங்கப்பட்டது .
