இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணி என்றே சொல்லலாம். இவர்கள் இணைந்து பணிபுரிந்த “ஆறு, வேல், சிங்கம்1, சிங்கம்1, சிங்கம்3” என ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஆறாவது முறையாக சூர்யாவுடன் இயக்குனர் ஹரி இணையவுள்ளார். இப்படத்திற்கு “அருவா” என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.
இப்படத்தின் ஹீரோயின் யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி பல நாட்களாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நடிகை ராஷி கண்ணா ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் உரையாடினார். அதில் ரசிகர் ஒருவர் “தமிழில் அடுத்த படம் என்ன” என கேட்டதற்கு, “ஆர்யாவுடன் அரண்மனை-3 மற்றும் சூர்யா-ஹரி இணையும் “அருவா” என கூறியுள்ளார். இவர் ஏற்கனவே “இமைக்கா நொடிகள், அயோக்கியா, அடங்கமறு, சங்க தமிழன்” என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். ராஷி கண்ணா தான் அருவா படத்தின் கதாநாயகி என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.