V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷுடன் மோதும் ரோமன் ஃபியோரி ! வைரலாகும் ஜகமே தந்திரம் புகைப்படம்

தனுஷுடன் மோதும் ரோமன் ஃபியோரி ! வைரலாகும் ஜகமே தந்திரம் புகைப்படம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் “ஜெகமே தந்திரம்” . இத்திரைப்படத்தை வொய் நாட் ஸ்டுடியோஸ் சார்பாக சஷிகாந்த் மற்றும் ரிலயன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து மாபெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி லண்டன்-இல் படமாக்கப்பட்டது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் விநியோக உரிமையை TRIDENT ஆர்ட்ஸ் ரவீந்தரன் வாங்கியுள்ளார். இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ப்ரவே ஹார்ட், டிராய், நார்னியா, கேம் ஆப் த்ரோன்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார்.

மே 01 இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ” ஜகம் சுகமடைந்ததும் ! ஜகமே தந்திரம் ரிலீஸ் ” என்று ட்வீட் செய்து கூடவே ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டார். அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் கிடா மீசையுடன் சிறந்த எழுத்தாளரும், புகழ் பெற்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்டான ரோமன் ஃபியோரியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுருளி என்ற மற்றொரு கதாபாத்திரத்தில் தனுஷ் இப்படத்தில் மிரட்ட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Most Popular

Recent Comments