V4UMEDIA
HomeNewsKollywoodதமிழ்ப்படம் 3" எடுக்க போகிறோம் - நடிகர் சதீஷ்

தமிழ்ப்படம் 3″ எடுக்க போகிறோம் – நடிகர் சதீஷ்

தசாவதாரம் படத்தில் உலக நாயகன் கமல் அவர்கள் பல கெட்ப்களில் வந்து அசத்தியது போல தமிழ்ப் படம் 2 ஆம் பாகத்திற்காக பல கெட்டப் போட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். தமிழ் சினிமாவில் வெளிவந்த பல ஹிட் படங்களின் காட்சிகளை (spoof) கிண்டல் செய்து எடுக்கப்பட்டது “தமிழ்ப்படம்”. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப் படம் மற்றும் தமிழ்ப் படம் 2 ஆம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாகத்திற்கு தமிழகம் முழுவதும் 5மணி காட்சிகள் திரையிடப்பட்டது.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் காமெடியன் சதீஷ். அந்தப் படத்தில் போட்ட வில்லன் கெட்டப்புகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் சதீஷ்.

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் போட்டியிருந்த கெட்டப்பை தமிழ்படம் 2 ஆம் பாகத்திற்கு போட்டபோது எடுத்த வீடியோவை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “அவர் வில்லன் நடிகர்களை தயவு செய்து கெட்டப் போடும் போது சாதாரணமாக போடுங்கள். தமிழ்ப் படம் 3 எடுக்கப்போகிறார்களாம். அதற்குள் என்னை இப்படி மாற்றி விடாதீர்கள்” என்று கெஞ்சிக் கேட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவுகிறது.

#தமிழ்படம்2 #GetUp5 #2Point0
🤓🤓🤓🤓 pic.twitter.com/2TjwOZxICw— Sathish (@actorsathish) May 2, 2020

Most Popular

Recent Comments