V4UMEDIA
HomeNewsBollywoodஇறந்து கிடந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிய ஷாருக்கான்

இறந்து கிடந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிய ஷாருக்கான்

சமீபத்தில் நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. ரயில் நிலையத்தில் தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரது உடலோடு விளையாடி கொண்டிருந்த குழந்தைக்கு ஆதரவு அளிப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ் மற்றும் ரயில் வசதி ஏதும் இல்லாததால் பல மையில் கிலோமீட்டர் நடந்தே சென்றது கடந்த சில வாரங்களாக பரபரப்பைக் கிளப்பியது. 




குஜராத்திலுள்ள அகமதாபாத் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் தனது கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் கத்திகாருக்கு செல்வதற்காக ரயில் ஏறியுள்ளார் அந்த பெண். ஆனால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக பயணித்தின்போதே அந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பிஹாரின் முசாபர்பூர் ரயில்வே நிலையத்தில் அந்த பெண்ணின் உடலோடு அவரது குடும்பத்தினர் இறங்கியுள்ளனர்.

அப்போது உயிரிழந்த தனது தாயின் உடலில் போர்த்தியிருக்கும் போர்வையை இழுத்து, இறந்தது கூட தெரியாமல் அவரது குழந்தை விளையாடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

बिहार के मुजफ्फरपुर का ये वीडियो हैं जहां एक बच्चा रेलवे स्टेशन पर मां से खेल रहा, उसे जगा रहा
उसे नही पता उसकी मां हमेशा के लिए सो चुकी है, भीषण गर्मी में चार दिन से ट्रेन में भूखी प्यासी मां की मौत हो गयी pic.twitter.com/xQCRby2q5P— Kavish (@azizkavish) May 26, 2020



இந்நிலையில் அந்த குழந்தைக்கு பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை உதவி செய்வதாக அறிவித்துள்ளது. அந்த குழந்தை அவனின் தாத்தா பாட்டியிடம் சேர்க்கப்பட்ட நிலையில் ‘தாயை இழந்து விளக்கமுடியாத வேதனையில் இருக்கும் அந்த குழந்தைக்கு அதைத் தாங்க கூடிய மன வலிமை கிடைக்க வேண்டும் . நமது அன்பையும் ஆதரவையும் அந்த குழந்தைக்கு வழங்குவோம்’ என கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments