அமேசான் ப்ரைம் வீடியோவிலிருந்து சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘படையப்பா’ திரைப்படம் திடீரென்று நீக்கப்பட்டுள்ளது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய திரைப்படங்களை வெளியிடும் ஓடிடி (OTT) தளங்களில் மிகவும் பிரபலமானது அமேசான் ப்ரைம்.
2000ம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “படையப்பா” மிகப்பெரிய ஹிட்டானது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது. இத்திரைப்படத்தை இப்பவும் சன் டிவியில் ஒளிப்பரப்பினால் TRPயில் சாதனை படைக்கும். அந்த அளவுக்கு இந்த படம் வெளிவந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும் படத்தின் மேல் உள்ள கிரேஸ் கொஞ்சமும் குறையவில்லை.
இந்த நிலையில் ‘படையப்பா’ திரைப்படமும் அமேசான் ப்ரைம்-இல் வெளியாகியிருந்தது. ஆனால் இந்த படத்தை அமேசானில் வெளியிடுவது குறித்து படத்தின் தயாரிப்பாளரோ, நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து உரிய அனுமதி கோரப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே படையப்பா படத்தை அமேசான் ப்ரைம் ல் இருந்து நீக்கிவிட்டனர்.