V4UMEDIA
HomeNewsKollywoodஇனி வலிமை அப்டேட் இல்லை - தயரிப்பாளர் போனி கபூர் ட்வீட் !

இனி வலிமை அப்டேட் இல்லை – தயரிப்பாளர் போனி கபூர் ட்வீட் !

ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கும் படம் ‘வலிமை’. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் தெரிந்ததே. தீபாவளி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் இப்போது 2021 க்கு தள்ளி போனது.

இந்த நிலையில் தல அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தயரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “கோவிட்‌ 19 என்னும்‌ கொரோனா என்கிற கொடிய நோயின்‌ தாக்கத்தில்‌, அகில உலகமே போராடிக்‌ கொண்டு இருக்கும்‌ இந்த தருணத்தில்‌ எங்கள்‌ நிறுவனம்‌ தயாரிக்கும்‌ எந்த படத்துக்கும்‌ எந்த விதமான விளம்பரமும்‌ செய்ய வேண்டாம்‌ என்று எங்கள்‌ நிறுவனத்தில்‌ பணியாற்றும்‌ நடிகர்‌, நடிகையர்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப கலைஞர்கள்‌ ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக்‌ கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம்‌ என்பதை தெரிவித்து கொள்கிறோம்‌. அதுவரை தனித்து இருப்போம்‌, நம்‌ நலம்‌ காப்போம்‌” என கூறியுள்ளார்.

#StayHomeStaySafe pic.twitter.com/QnLMeOk8JJ— Boney Kapoor (@BoneyKapoor) April 30, 2020

Most Popular

Recent Comments