தமிழ் திரைப்படங்களை தியேட்டரில் ரீலீஸிற்கு முன்பே OTT இல் ரிலீஸ் செய்வது தவறா சரியா என விவாதங்கள் நடைபெற்று வரும் இந்நேரத்தில் சரவணராஜன் இயக்கத்தில் வைபவ், சம்பத், சனா அல்டாப், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ள “ஆர்கே நகர்” திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இப்படம் கடந்த வருடமே நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட்டு அடுத்த சில மணி நேரங்களிலே விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பால் நீக்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch #Rknagar LEAGALLY on @NetflixIndia from today https://t.co/QRmLlpi1rU @badri_kasturi @saravanarajan5 @actor_vaibhav @Premgiamaren @Cinemainmygenes— venkat prabhu (@vp_offl) April 28, 2020