V4UMEDIA
HomeNewsவைரலாகும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் "BeTheRealMan" வீடியோ !

வைரலாகும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் “BeTheRealMan” வீடியோ !

கொரோனா வைரஸ் தொற்றால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு மே 03 வரை பிற்படுத்தப்பட்டுள்ளது. ஷூட்டிங் இல்லாத நிலையில், பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கி வைத்தார். அதாவது பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியுள்ளார்.

தற்போது #BetheREALMAN சாவலை தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் செய்து தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை இந்த சவாலை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரபல இயக்குனர் சுகுமார். தேவி ஸ்ரீ பிரசாத் வீட்டை சுத்தம் செய்து, தனது தந்தை சத்தியமூர்த்தி போட்டோக்களை துடைத்து, தனது அம்மாவிற்கு ஆம்லெட் செய்து கொடுத்து அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், கார்த்தி, யாஷ், ஹரிஷ் ஷங்கர் மற்றும் மோகன்லாலுக்கு #BeTheREALMAN சாவலை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Here’s my #betheREALMAN video Dear SUKU BHAI @aryasukku 😁

Wit an Entertaining Effort😜@imvangasandeep @ssrajamouli @KChiruTweets

Nw I request My Dear Friends@alluarjun @Karthi_Offl @TheNameIsYash @harish2you
&
Our Lalettan
Dear @Mohanlal sir
2 take d Challnge Forwd🙏🏻 pic.twitter.com/6CnIgFy6P8— DEVI SRI PRASAD (@ThisIsDSP) April 29, 2020

Most Popular

Recent Comments