V4UMEDIA
HomeNewsபேத்தியுடன் விளையாடும் சிரஞ்சீவி ! வைரலாகும் வீடியோ !

பேத்தியுடன் விளையாடும் சிரஞ்சீவி ! வைரலாகும் வீடியோ !

ஊரடங்கு நேரத்தில் சினிமா பிரபலங்கள் அனைவரும் அவர்களது வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை அதிகமாக செலவழித்து வருகிறார்கள். சினிமா பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடுகின்றனர்.. இந்த நேரத்தில் ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

சமீபத்தில் #betheREALMAN சாவலில் கலந்து கொண்டு வீடியோ வெளியிட்டார். தற்போது தினமும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வரும் சிரஞ்சீவி ஓராண்டுக்கு முன்பாக தனது பேத்தியுடன் விளையாடிய அழகான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரது பேத்தி சிரஞ்சீவி நடித்த “கைதி நம்பர் 150” படத்திலிருந்து “யூ அண்ட் மீ” பாடலை போட வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். அந்த பாடலை நிறுத்தினாலும் மாற்றினாலும் அழ ஆரம்பிக்கிறார். அப்பாடலை போடும் போது மீண்டும் சிரிக்கிறார். அழகான இந்த தருணத்தை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்த சிரஞ்சீவி தற்போது இந்த வீடியோவை எடுத்து ஒரு வருடம் ஆகிவிட்டது நினைவுகளாக இங்கே பகிர்ந்து உள்ளேன் என்று பேத்தியுடன் விளையாடிய தருணத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாக பரவுகிறது.

Always amazed @ the power of music.Just over 1 yr & how this little kid enjoyed music & tried doing dance moves is sheer bliss.Paused & played music 2 see she was really loving it.పాట నాది కాబట్టి,అమ్మమ్మ సురేఖ దగ్గర క్రెడిట్ నాకే😄 #PreLockdownMoments #Throwbackvideo #navishka_k pic.twitter.com/znNOyMY0MB— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 28, 2020

Most Popular

Recent Comments