தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தன் திறமையால் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் “விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தின் தெலுங்கு ரீமேக்கான “ஏ மாய சேஸாவே” ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
8 வருட காதலுக்கு பின் இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வருகின்றனர். திருமணத்திற்கு பின்பும் சமந்தா நல்ல கதையுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். . இந்நிலையில் கொரோனா ஊரடங்கு என்பதால் அனைத்து திரைப்பிரபலங்களும் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ரசிகர்களுடன் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் பேசுகின்றனர்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சமந்தாவிற்கு கணவர் நாக சைதன்யா தானே வீட்டிலே கேக் செய்து சமந்தாவின் பிறந்தநாளை இந்த லாக்டவுனில் சிம்பிளாக கொண்டாடியுள்ளனர். சமந்தாவிற்கு பிரபலங்கள் , ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர். சமந்தாவின் ரசிகர்கள் #HBDsamantha என உலகளவில் ட்ரெண்ட் செய்து அசத்துகின்றனர்.