V4UMEDIA
HomeNewsKollywoodகுடும்ப பிரச்சனைகளை அனுபவிக்கும் பெண்களுக்கு உதவ முன் வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் !

குடும்ப பிரச்சனைகளை அனுபவிக்கும் பெண்களுக்கு உதவ முன் வந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் !

கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்திலும் வீட்டினுள் குடும்ப பிரச்சனைகளை அனுபவித்து வரும் பெண்களுக்கு உதவ முன்வந்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவர் வெளியிட்ட வீடியோவில்,

“அனைவருக்கும் வணக்கம் ! பெண்களின் குறிப்பிட்ட ஒரு முக்கியமான விஷயத்திற்காக இந்த வீடியோவை நான் பதிவிடுகிறேன். இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்திலும் பல பெண்கள் தங்கள் வீட்டில் குடும்ப கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். குடும்ப கொடுமைகளை என கூறப்படும் (Domestic Violence) அனுபவித்து வருகின்றனர். அதாவது அந்தப் பெண்களுக்கு உதவ யாரும் இல்லாமலும், வேறு வழியில்லாமல் தப்பிக்க முடியாமல் வீட்டிற்குள் மாட்டி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உதவ ஒரு குழு உள்ளது. இந்த நம்பர் Toll Free – 1 800 102 7282 கால் பண்ணுங்க .கண்டிப்பா உதவி வரும். பெண்களுக்கு இந்த நம்பரை ஷேர் பண்ணுங்க. இது உங்களுக்கு தெரியாம கூட அவர்கள் வீட்டிற்குள் நடக்கும். ஏன் நடந்து கொண்டு கூட இருக்கலாம். இந்த நம்பரை யாருக்கும் தெரியாம, அவங்களோட குழந்தைகளுக்கு கூட தெரியாமல் கொடுங்க, குழந்தைங்க எதார்த்தமா வீட்டில் சொன்னால் கூட பெரிய பிரச்சனையாகும். அதனால தனியா இருக்கும்போது கொடுங்க. எல்லா இடத்திலும் இப்பிரச்சனை நடக்குது. படிச்சவங்க படிக்காதவங்க ஏழைகள் பணக்காரர்கள் அந்தஸ்து உள்ளவங்க இல்லாதவங்க என அனைத்து இடங்களிலும் குற்றம் நடக்கின்றது. இது யாருக்கு வேணாலும் நடக்கலாம், எந்த பெண்ணுக்கு வேணாலும் நடக்கலாம். முடிந்தவரை இந்த நம்பரை ஷேர் பண்ணுங்க உங்களுக்கு உதவி கண்டிப்பாக தேடி வரும். நன்றி ! ” என கூறியுள்ளார்.

Let’s help our women..Save them from #DomesticViolence during this lockdown..they may be trapped with their abusers..plz share this number in secret to every woman you know 1800 102 7282 #abuse knows no age,wealth or status..it cud be happening now to anyone @CMamathi @pcvc2000 pic.twitter.com/R6Dl9jRm5n— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) April 28, 2020

Most Popular

Recent Comments