Home News Kollywood நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய விஜய் சேதுபதி !

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய விஜய் சேதுபதி !

சில நாட்களுக்கு முன், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை கோவிலை பற்றி கருத்து தெரிவித்தார். நடிகை ஜோதிகாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா “அன்பை விதைப்போம்” என்று அறிக்கை இன்று வெளியிட்டுள்ளார். ஜோதிகாவின் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என கூறியுள்ளார். இவரது அறிக்கைக்கு பல தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வரும் இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி “சிறப்பு” என கூறியுள்ளார்.

Sirappu 👍 pic.twitter.com/f63971LDCt— VijaySethupathi (@VijaySethuOffl) April 28, 2020