குரூப் டேன்சராக தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையை தொடங்கினாலும், தனது அயராத முயற்சி மற்றும் கடின உழைப்பால் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குனராக வளர்ந்தார். இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபரிந்துள்ளார். இயக்குனராக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சிக்ஸர் அடித்தார். இவரது நடிப்பில் வெளிவந்த முனி மற்றும் காஞ்சனா – 2,3 மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் பெரிய வரவேற்பு பெற்றது.
இதனையடுத்து, தற்போது காஞ்சனா படத்தை இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ். அக்ஷய்குமார், கியாரா அத்வானி நடிக்கின்றனர். இந்த படம் உலகமெங்கும் மே 22 ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டதும். ஆனால்பிகொரோனா வைரஸ் எதிரொலியால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகள் மற்றும் மால்கள் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் காஞ்சனா படத்தை OTT இல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஒரு மிக பெரிய OTT நிறுவனம் பெரும் தொகைக்கு பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுமட்டும் நடந்தால் இந்தியா சினிமாவில் மிகப்பெரிய புரட்சியை நடக்கும்.