கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடெங்கும் மே 03 வரை ஊரடங்கு உத்தரவு மத்திய அரசு பிற்படுத்தப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கி வைத்தார். அதாவது பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுமாறு அவர் கூறியுள்ளார்.
இந்த சவாலை தெலுங்கு சினிமாவில் பல நடிகர்கள் பின்பற்றி வருகின்றனர். அதாவது தங்கள் வீட்டு வேலை செய்வது போல வீடியோ எடுத்து அதை வெளியிட்டு இன்னொருவரை செய்யுமாறு சொல்லுவார்கள். தெலுங்கு சினிமாவில் இது ஆரோக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது மற்றும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றது. இந்நிலையில் பிரபல நடிகர் வெங்கடேஷ் வீட்டு வேலை செய்து, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, காய்கறிகள் வெட்டி சமைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெங்கடேஷ் நடிகர் மகேஷ் பாபுவை nominate செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ மிக வைரலாக பரவி வருகிறது.
Here’s my video @tarak9999.
Let’s help our family with domestic work and #BetheREALMAN
I request our Chinnodu @UrsTrulyMahesh, my cobra @IAmVarunTej & @AnilRavipudi to pass it on. pic.twitter.com/ILeH3Cm0Xq— Venkatesh Daggubati (@VenkyMama) April 23, 2020