விஷ்ணு விஷால் இயக்குனர் பிரபு சாலமனுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் “காடன்”. படத்தின் பெரும்பகுதி அடர்ந்த காட்டுக்குள் படமாகியுள்ளனர். காடன் படத்தில் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் குறித்து நம்மிடையே இயக்குனர் பிரபு சாலமன் பகிர்ந்து கொண்டார்.
காட்டுக்குள் யானைகளின் வழித்தடத்தை மறித்து சுவர் எழுப்பும் போது மற்ற யானைகள் தொந்தரவு செய்யக்கூடாது என கும்கி யானை பாகனாக வருபவர் தான் விஷ்ணு விஷால். படத்தின் ஆரம்பத்தில் விஷ்ணு விஷால் கேரக்டர் நெகட்டிவாக தெரிந்தாலும் போகப்போக வனத்தின் முக்கியமும், யானையின் பாதுகாப்பும் புரிந்து கொண்டு அந்த தடுப்பு சுவரை உடைக்க போராட்டத்தில் தானும் ஒரு மனிதனாக களமிறங்குவார். இந்த படத்தில் காதல் காட்சிகள் என கமர்ஷியலாக எதுவும் இருக்காது. இப்படத்தில் பத்திரிகையாளர் அருந்ததி என்ற கேரக்டர் மிகவும் பேசப்படும். அந்த ரோலை ஸ்ரேயா என்ற பெண் ஏற்று நடித்துள்ளார்.