V4UMEDIA
HomeNewsKollywoodஆயரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது ஏன் ? பதிலளித்த ஜிவி பிரகாஷ்

ஆயரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது ஏன் ? பதிலளித்த ஜிவி பிரகாஷ்

செல்வராகவன் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் உண்டு. அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7G, புதுப்பேட்டை, ஆயரத்தில் ஒருவன் என அனைத்துமே காலம் தாண்டி நிலைத்து நிற்கும் படங்கள். குறிப்பாக ஆயரத்தில் ஒருவன் போன்ற திரைப்படத்தை இயக்க தமிழ் சினிமாவில் ஆளே இல்லை என்று கூறலாம். அப்படி நமது ராஜராஜ சோழன் மற்றும் அவரது வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் தான் செல்வராகவன் எனும் படைப்பாளி.

கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென், அழகம் பெருமாள் ஆகியோர் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். ரிலீஸ் ஆன சமயத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை அப்போது இருந்த ரசிகர்கள் பெரிதாக கொண்டாட தவறிவிட்டனர். தற்போதைய இளைஞர்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடி வருகின்றனர். சென்ற வருடம் திரையரங்களில் ரீ-ரிலீஸ் ஆனபோது பெரும் வரவேற்பை பெற்றது.

ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு மிகப்பெரிய தூண் ஜிவி பிரகாஷின் இசை என்றே சொல்லலாம். நேற்று ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில் அளித்தார். “ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார். முதலில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தை இரண்டு பாகமாக எடுக்கத்தான் முடிவு செய்தாராம். ஆனால் முதல் பாகத்தின் தோல்வியால் அந்த முயற்சியை கைவிட்டதாக தெரிவித்துள்ளார்”. அப்படி எடுத்திருந்தால் ராஜராஜ சோழன் மற்றும் அவரது வரலாறு பற்றி கிட்டத்தட்ட நான்கு பாகங்கள் வரை எடுத்து இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

Recent Comments