80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக வலம் வந்தவர் ராமராஜன். அவரை வைத்து படம் எடுத்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் பலர் உண்டு. தமிழ் சினிமாவில் ரூ.1 கோடி சம்பளமாக வாங்கிய முதல் நடிகர் ராமராஜன். உச்சத்தில் இருந்த அவர், ஒரு கட்டத்தில் சரியான கதை உள்ள படங்களை தேர்வு செய்யத்ததனால் மார்க்கெட்டை இழந்தார்.
அதன் பின் அதிமுகவில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு பின் அரசியலில் இருந்தும் விலகினார். தற்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை என்றும் டைரக்ஷன் மட்டுமே செய்ய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராமராஜன் ஏற்கனவே “மண்ணுக்கேத்த பொண்ணு” படத்தை இயக்கி நடித்துள்ளார். அவர் மறைந்த இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தகக்து.