நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். முதல்முறையாக ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் விநியோக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வாங்கியுள்ளார்.
பொன்மகள் வந்தாள் உலகெங்கும் மார்ச் 28 ரிலீஸ் என இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். மே முதல் வாரத்தில் அமேசான் பிரைம்-ல் ரீலீசாகும் என நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. இப்படத்தை தயாரிப்பு செலவு 5 கோடி ஆனால் அமேசனிடம் 9 கோடிக்கு விற்றுள்ளார் சூர்யா. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளன.