நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல திறமை வாய்ந்தவர் ராகவா லாரன்ஸ். தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை 4 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளார்.
இந்நிலையில் ராயபுரம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஏராளமான மளிகை பொருட்களை கொடுத்து உதவியுள்ளார். இந்த பொருட்களை பெற்ற அப்பகுதி மக்கள் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது சைகை மொழியில் ராகவா லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.