விஜய் டிவி தொகுப்பாளர் டிடி திவ்யதர்ஷினி. அவரது பேச்சுக்கே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நள தமயந்தி, விசில், பவர் பாண்டி போன்ற பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். திவ்யதர்ஷினியை அனைவரும் டிடி என்று தான் பாசமாக அழைப்பார்கள்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடி தனது டைரி குறிப்புகளின் சில பக்கங்களை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். அதில் சில தினங்களுக்கு முன் (AIDS) எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்காக தான் சென்றதாகவும், அப்போது உலகநாயகன் கமல் (வசூல்ராஜா எம்பிபிஎஸ்) ஸ்டைலில் அந்த பெண்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போது முதலில் தான் கட்டிப்பிடித்த பெண், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அந்த உணர்வை பெற்றதாக சொல்லியிருக்கிறார். மீண்டும் ஒருமுறை தன்னை கட்டிப்பிடிக்கும்படி அந்த பெண் கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார் . அதை தொடர்ந்து அங்கிருந்த அனைத்து பெண் நோயாளிகளையும் தான் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியதாக டிடி கூறியுள்ளார் . அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.
A memory from my heart ❤️ I still remember HER face ❤️ Leave a 🤗
42.5k Likes, 469 Comments – Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on Instagram: “A memory from my heart ❤️ I still remember HER face ❤️ Leave a 🤗”