கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சினிமா தொழிலர்கள் பலர் வேலையின்றி வறுமையில் வாடுகின்றனர். ஆர்.கே.செல்வமணி வேண்டுகோளுக்கிணங்க முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உதவி இயக்குனர்கள், நலிந்த கலைஞர்கள் 1500 பேருக்கும், சினிமாத்துறை சார்ந்த சங்கங்களுக்கும் சுமார் 24 டன் எடை உள்ள அத்தியாவசிய பொருட்களை கொரோனா
நிவாரணமாக வழங்கியுள்ளர்.
இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவருமான ஆர்.கே.செல்வமணி சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் “அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய ரஜினி சார் அவர்களுக்கு, இன்றைய கோவிட்-19 வைரஸ் எதிர்ப்பில் தொழில் இன்றி வீட்டில் முடங்கி கிடக்கும் கலை குடும்பத்தின் இயக்குனர்கள், சங்க உறுப்பினர்களுக்கு தாங்கள் இன்று அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் கிடைக்க பெற்றோம். குறிப்பறிந்து, கேட்காமலே உங்கள் சினிமா சகோதரர்களுக்கு வாரி வழங்கும் தங்கள் கொடையுள்ளதை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. போற்றுகிறோம். தங்கள் நலமும் புகழும் உயரட்டும் குடும்பம் நீடுழி வாழட்டும்” என கூறியுள்ளார்.