கொரோனா ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டினுள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவும், மனித நேயத்துடன் இருக்க வேண்டி உலகநாயகன் கமல்ஹாசன் ‘அறிவும் அன்பும்’ என்ற பாடலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார்.
ஜிப்ரான் இசையில் கமல்ஹாசன் பாடல் எழுதியுள்ளார். அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, முகென், சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் இப்பாடலை பாடியுள்ளனர். இப்பாடல் இன்று THINK MUSIC யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த பாடல் ரசிகர்களால் வைரலாக பரவியது.