V4UMEDIA
HomeNewsKollywood"தளபதி விஜய்"யை பாராட்டிய பாண்டிச்சேரி முதல்வர் !

“தளபதி விஜய்”யை பாராட்டிய பாண்டிச்சேரி முதல்வர் !

தளபதி விஜய் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக 1.30 கோடி வழங்கியுள்ளர். தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், கேரளாவுக்கு ரூ.10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ.5 லட்சம் நிதி என மொத்தமாக 1.30 கோடி ரூபாய் வழங்கியுள்ளர். இது தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவதற்காக தனது ரசிகர் மன்றங்களுக்கு ஒரு பெரும் தொகை விநியோகிக்கப்படுகிறது.

தளபதி விஜய் அவர்கள் தக்க சமயத்தில் செய்த உதவியை பலரும் போற்றி வருகின்றனர். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதியாக 5 லட்சம் தளபதி விஜய் வழங்கியதற்காக, அவரை புதுவை முதல்வர் நாராயணசாமி நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார். “நடிகர் விஜய் புதுவை முதல்வர் நிவாரண நிதியாக 5 லட்சம் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதுவை மக்களுக்கு நிவாரணம் செய்த அவரது தாராள மனதை நான் வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments