அஜித்-ஷாலினி இன்று 20வது திருமண நாள்!
தமிழ் சினிமாவின் க்யூட் ஜோடியான அஜித்- ஷாலினி இன்று தங்களது 20வது திருமண ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றனர். 1999- ஆம் ஆண்டு இருவரும் நடித்த அமர்க்களம் படம்தான் இவர்களது காதலுக்கான விசிட்டிங் கார்டு. கொஞ்சம் டீடெய்லா சொல்லணுமுன்னா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாகவே தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோயினாக அறிமுகமானது என்னவோ தளபதி விஜய்யின் காதலுக்கு மரியாதை. இதுதான் தமிழிலும் ஷாலினிக்கு முதல் படம்.இரண்டாவது படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார். முன்னரே சோனது போல் அதுதான் அமர்க்களம். அஜித் – ஷாலினி காதல் வாழ்க்கை ஆரம்பமானதும் அந்த படத்தில்தான்.
இயக்குநர் சரண் அமர்க்களம் படத்தில் நடிப்பதற்கு ஷாலினியிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அஜித் நேரடியாக பேசவே அவரது மரியாதைக்காக ஷாலினியும் ஒப்புக் கொண்டுள்ளார்.படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்துள்ளது. அதுவரை ஷாலினி மீது காதல் வராத அஜித்திற்கு அவருக்கு ஏற்பட்ட காயத்தைப் பார்த்தும், அவரது பக்குவத்தைப் பார்த்தும் காதல் வந்துள்ளது.
படத்தின் காட்சிப்படி, சீனிவாசா தியேட்டரில் ஓடும் அண்ணாமலை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஷாலினி எடுத்து வந்து தனது வீட்டில் வைத்துக் கொள்வார். அப்போது, அவரிடம் இருந்து கிளைமேக்ஸ் காட்சி பெட்டியை வாங்க அஜித் கோபத்துடன் கையில் கத்தியோடு ஷாலினி வீட்டிற்கு வருவார். கோபத்தோடு, ஷாலினியுடன் சண்டை போட்டு கிளைமேக்ஸ் படப்பெட்டியை பிடுங்குவார். இது தான் சீன்.
அந்த காட்சியின் போது, அஜித் தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து வீசுவார். அது, ஷாலினி கையில் ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது.ஒட்டு மொத்த யூனிட்டும் அதிர்ச்சியடையவே ஷாலினி மட்டும் ரொம்பவே கூலாக இருந்துள்ளார். ஆனால், நம்ம தல சும்மா இருப்பாரா? இல்லவே இல்லை. கூச்சலிட்டுள்ளார். அவர் கூச்சலிட்டதில் மருத்துவமனையே செட்டுக்கு வந்துள்ளது.
அதன் பிறகு ஷாலினி ஷூட்டிங்கிற்கு வரவே மாட்டார் என்று நினைத்துளனர். ஆனால், இது குறித்த அறிந்த ஷாலினியின் அப்பா உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார். வந்தவர், சிறு வயதிலிருந்தே படப்பிடிப்பின் போதோ அல்லது படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்திலோ ஷாலினிக்கு ரத்தம் காயம் ஏற்பட்டாலோ அந்த படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும். அதே போன்று தற்போது அமர்க்களம் படத்திலும் நேர்ந்துள்ளது. ஆதலால், இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்று பாராட்டு தெரிவிச்சாராம்
இச்சூழலில்தான் அஜித்திற்கும் நடிகை ஷாலினிக்கும் லேசான காதல் மலர தொடங்கி இருந்தது. டோட்டல் யூனிட்டே அந்தக் காதலின் கெளரவத்தை பற்றி முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். தியேட்டரில் உருவான காதல் லேசாக கசிந்து பத்திரிகை பக்கம் பாய ஆரம்பித்துவிட்டது. அஜித்திற்கும் ஷாலினிக்கும் காதல் கன்ஃபார்ம் என தலைப்புப் போட்டு விஷயத்தை பரப்பினார்கள். ஆனால் மிக அமைதியாக இருந்தார் அஜித். ஷாலினி தரப்பில் இருந்தும் பெரிய எதிர்வினைகள் இல்லை.அதே அமர்களத்தில் அஜித், ஷாலினியை காதலிப்பதாக கூறும் காட்சி. ஆம், ஷாலினியை பார்க்க வரும் அஜித், அவருக்கு பூங்கொத்து கொடுப்பார். இதை சீனைக் கேள்விப்பட்ட அஜித் தனது பணத்தில் ஸ்பெஷல் பூங்கொத்து வாங்கி கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் ஷாலினியின் அப்பா யாருக்கு இந்த பூங்கொத்து என்று அஜித்திடம் கேட்டுள்ளார். இதற்கு, அஜித் பயந்து கொண்டு இது நடிகர் மாதவன் தனது காதலிக்காக வாங்கியது என்று கூறி சமாளித்துள்ளார். எனினும் ஷாலினிக்கு பூங்கொத்து கொடுத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதை மறுக்காமல் முகத்தில் எந்த எக்ச்பிரசனும் காண்பிக்காமல் போய் விட்டாராம் ஷாலினி
உடனே சரணிடம் சீக்கிரமே படத்தை எடுத்து முடிச்சிருங்க சார். இல்லை என்றால் இந்த பொண்ணால் நான் ரொம்ப அப்செட் ஆயிடுவேனோ-ன்னு பயமாக இருக்கு என்று தன்னிடம் கூறினாராம்.இதை அடுத்து வந்த அஜித்தின் பிறந்தநாளுக்கு இயக்குநர் சரண் அஜித்தை தொடர்புகொண்டு ஷாலினியை பேச வைத்துள்ளார். அப்போது பேசிய ஷாலினி தான் அப்பா செல்லம் என்பதால், அப்பாவிடம் சம்மதம் வாங்கும்படி கூறியுள்ளார். அஜித் முகத்தில் ஆயிரம் வெளிச்சம். அவர் எதை விரும்பினாரோ அது அவர் கைக்கு கிடைக்கப்போகிறது. மகிழ்ச்சி வராமல் இருக்குமா என்ன?
அஜித்-ஷாலினி ஜோடி பற்றி காதல் செய்திகள் காதை எட்டிய போதே பலரும் அதற்கு பச்சைக் கொடிக் காட்ட ஆரம்பித்திருந்தார்கள். மிக அழகான ஜோடி என அவர்களை புகழ ஆரம்பித்திருந்தார்கள். எதிர்மறை விமர்சனங்கள் இல்லை. எப்போது இந்த ஜோடி சேரும் என கனவுக் கண்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பாசிடிவ் வைப்ரேஷன் தான் அஜித்தின் ஆகச்சிறந்த பலம். அதை அவர் உடன் இருபவர்களிடம் ஒட்ட வைத்துவிடுவார். எப்போதும் எதிர்மறை எண்ணம் இல்லாதவர் அவர். அடுத்த நொடியும் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் என தீர்க்கமாக நம்பக்கூடியவர் அவர். அதே பாசிடிவ் வைப்ரேஷனுடன் இன்னொருவர் அவர் கூட இணைந்தால்? ஆயிரம் குதிரை பலம் கூடிவிடும் இல்லையா?
திருமணத்திற்கு முன் அஜித் அதிகமாக புகைப்பிடிப்பார். அவர் உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சர்யம் எனக் கூறும் அளவுக்கு எரிந்துக் கொடிருக்கும் புகை. அதை தனக்குப் பகை என்றார் ஷாலினி. அன்றுவிட்டவர்தான். இன்று வரை சிகரெட்டை அவர் தொடவே இல்லை.
ஆக சினிமாவின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருப்பது என்னவோ தல அஜித் – ஷாலினி.