கொரோனா நோயை தடுக்க போராடும் மருத்துவ பணியாளர்களுக்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பாப் பாடகி லேடி காகா, “One World ; Together At Home” என்ற ஆன்-லைன் இசை நிகழ்ச்சியை நடத்தி ரூ.980 கோடி நிதி திரட்டியுள்ளார். லேடி காகா இதுவரை பல விருதுகளை வென்றுள்ளார். சிறந்த பாடலை எழுதியதற்காக கிராமி விருதும், இதே பிரிவில் கடந்த ஆண்டும், சிறந்த பாப் இரட்டையர் மற்றும் குழு பாடலுக்கான கிராமி விருதுகளை வென்றுள்ளார். இந்நிலையில், கொரோனா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் பாப் பாடகி லேடி காகா
இந்நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா, பில்லி ஜோ அர்ம்ஸ்ட்ராங், கிறிஸ் மார்ட்டின், ஜெனிபர் லோபாஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 70 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற ஷாருகானுக்கு உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ராஸ் அதானம் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். மருத்துவ துறை ஊழியர்கள் நலனுக்காக நடத்தப்பட்ட இந்த இணைய இசை நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் நிதி வழங்கினார்கள். பல நிறுவனங்களும் நிதி கொடுத்தன. மொத்தம் ரூ.980 கோடி வசூலாகி உள்ளது.