தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தளபதி விஜய் மற்றும் தனுஷ். தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி வரை இருவருக்கும் ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனா தொற்று சமயத்திலும் தளபதி விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார்கள்.
தளபதி விஜய் பிறந்தநாள் ஜூன் 22 , தனுஷ் பிறந்தநாள் ஜூலை 28 . இவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போதே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். #ஜூன்22தமிழன்திருவிழா ( 500 K டிவீட்ஸ் ) என தளபதி விஜய் ரசிகர்களும், #ஜூலை28தங்கமகன்திருவிழா( 100 K டிவீட்ஸ் ) என தனுஷ் ரசிகர்களும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.