V4UMEDIA
HomeNewsKollywoodகில்லி திரைப்படம் உருவான கதையும், சாதனையும் !

கில்லி திரைப்படம் உருவான கதையும், சாதனையும் !

கில்லி திரைப்படம் “தளபதி விஜய்”யின் சினிமா கேரியரில் முக்கிய இடத்தை பிடித்தது. தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. மகேஷ் பாபு நடித்த “ஒக்கடு” படத்தின் ரீமேக் தான் “கில்லி”. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மிக பிரம்மாண்டமாக தயாரித்த இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்தயர்தி, ஜெனிபர், தாமு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். வித்யாசாகர் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்தார்.

 தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப ஸ்கிரிப்டை பக்காவாக ட்யூன் செய்திருந்தார் தரணி. படம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் வெற்றி பெற்றது. கபடி வீரர்ராக பட்டைய கிளப்பியிருப்பார் தளபதி விஜய். அப்பாவாக பயப்படும் பையனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. தளபதி விஜய் பேசும் அனைத்து வசனங்களும் கைதட்டல் பிளக்கும். குறிப்பாக “ஆள் ஏரியா கில்லி டா” “தம்மாத்தூண்டு ப்ளேடு மேல வெச்ச நம்பிக்கைய உன் மேல வை ஜெயிக்கலாம்” “கபடி ஆடலாம், கில்லி ஆடலாம், கிரிக்கெட் ஆடலாம், கதகளி கூட ஆடலாம் ஆனா, ஆணவத்துல மட்டும் ஆடவே கூடாதுடா” போன்ற வசனங்கள் இன்றுவரை பேமஸ். குறிப்பாக “ஹாய் செல்லம்” என பிரகாஷ்ராஜ் சொல்லுவது பட்டி தொட்டி என மிகப்பெரிய ரீச். தங்கையை கலாய்ப்பது, அப்பா அம்மாவை ஏமாற்றி விட்டு கபடி ஆடுவது என விஜய்யின் ஒவ்வொரு குட்டி குட்டி ரியாக்‌ஷனும் வேற லெவல் ரீச் ஆனது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது.

நெல்லை ராம் முத்துராம் திரையரங்கத்தில் இதுவரை அதிகம் பேர் (1.5 லட்சம் பேர்) பார்க்கப்பட்ட தமிழ் படம் என்ற பெருமை கில்லியே சேரும். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த அடிமை பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் படங்களின் வசூலை முறியடித்த படமும் கில்லியே. உலகமெங்கும் 50 கோடி வசூல் சாதனை படைத்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமை தளபதி யின் கில்லி படத்திற்கே. Youtube, சமூக வலைத்தளங்கள் என எதுமே இல்லாதே காலத்திலேயே பட்டி தொட்டி என வைரல் ஹிட்டான பாடல் “அப்படி போடு”. 13 வருடங்களாக சன் டிவி PRIME SLOT ல் ஒளிபரப்பாக கூடிய ஒரே படம் என்ற பெருமையும் கில்லி திரைப்படத்திற்கே சேரும். படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொல்லும் வசனம் தான் நியாபகம் வருகிறது “எத்தனை வருடங்கள் ஆனாலும் கில்லி படத்திற்கு உண்டான மாஸ் கொஞ்சம் கூட குறையவில்லை”. கில்லி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் #16YearsOfBlockbusterGhilli என்ற ஹஷ்டேக்கை உலகளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் தளபதி விஜய் ரசிகர்கள்.

Throwback #Thalapathy‘s #Ghilli which had 175+ Days Run & still it is the highest no of footfalls we’ve ever got, whooping 150K+ !!
The record set by Ghilli can’t be recreated. pic.twitter.com/vkuZHdTE0K— Ram Muthuram Cinemas (@RamCinemas) April 17, 2020

Most Popular

Recent Comments