V4UMEDIA
HomeNewsKollywoodTRP யில் முதல் இடம் கில்லி திரைப்படத்திற்கே !

TRP யில் முதல் இடம் கில்லி திரைப்படத்திற்கே !

தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் கில்லி. கபடி வீரராக பட்டைய கிளப்பியிருப்பார் விஜய். ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த இத்திரைப்படத்தை கடந்த வாரம் (மார்ச் 29) சன் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்பியதை அடுத்து ட்விட்டரில் படம் தொடர்பான கருத்துகள் அதிகம் பதிவு செய்யப்பட்டன.

பல பிரபலங்கள் கில்லி படத்தை தாங்களும் டிவியில் பார்ப்பதாக தங்களது சமூக வலைத்தளங்களில் ட்வீட் செய்தனர். இதையடுத்து இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் கில்லி என்ற ஹேஸ்டேக் இடம்பிடித்தது. இந்நிலையில் BARC கடந்த வாரத்தின் TRP யை வெளியிட்டது. வழக்கம் போல் தளபதி விஜய் யின் கில்லி திரைப்படம் 17 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 16 வருடங்கள் ஆகியும் கில்லி திரைப்படம் முதல் இடத்தில் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. 16 வருடங்களாக சன் டிவி PRIME SLOT ல் ஒளிபரப்பாக கூடிய ஒரே படம் என்ற பெருமையும் கில்லி திரைப்படத்திற்கே சேரும்.

Most Popular

Recent Comments