V4UMEDIA
HomeNewsKollywoodடிவி சேனல்களை ஆக்கிரமித்த "தளபதி விஜய்" யின் படங்கள் !

டிவி சேனல்களை ஆக்கிரமித்த “தளபதி விஜய்” யின் படங்கள் !

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 24 முதல் மே 3 வரை தொடர் ஊரடங்கு உத்தரவு பிற்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளி வர வேண்டும் அதற்கும் சிறிது நேரம் மட்டுமே தரப்பட்டது.

மற்ற நேரங்களில் மக்கள் வீட்டினிலே இருக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவினால் சீரியல் ஷூட்டிங் இல்லாத நிலையில் பழைய சீரியல்கள் மட்டும் மக்கள் விரும்பி பார்க்க கூடிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பட்டன. மக்களை தங்கள் சேனல் பார்க்க வேண்டும் என சன் டிவி ஆரம்பித்து ராஜ் டிவி வரை போட்டி போட்டனர். இந்நிலையில் தான் தளபதி விஜய் படங்களை ஒளிபரப்ப டிவி சேனல்கள் முடிவு செய்தன. தளபதி விஜய் அவர்களுக்கு 6 முதல் 60 வரை ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மார்ச் 15லிருந்து ஏப்ரல் 18 வரை அதாவது 33 நாட்களில் தளபதி விஜய் நடித்த 41 படங்களை சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி, மெகா டிவி ஒளிபரப்பியுள்ளனர். உண்மையிலே இது மிக பெரிய சாதனை என்றே சொல்லலாம். என்னன்னா படங்கள் ஒளிபரப்பட்டன என்பதை துல்லியமாக கணக்கிட்டு பதிவு செய்துள்ளார் பிரபல ட்ராக்கர் மற்றும் பிளாக் எழுத்தாளர் அஜய் ஸ்ரீனிவாசன். குறிப்பாக தளபதி விஜய் யின் கில்லி இன்றும் TRP யில் முதல் இடத்தில் உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழிகளின் டிவி சேனல்களிலும் தளபதி விஜய் படங்கள் ஒளிபரப்பட்டன. சுருக்கமாக சொன்னால், மாஸ்டர் படத்தை தவிர அனைத்து படங்களையும் ஒளிபரப்பி விட்டனர் டிவி சேனல்கள்.

Update on #ThalapathyVijay movies on Tamil channels#Priyamanavale #Puli (R), #KathalukkuMariyathai (all 3-Sun) #Velayutham ,#Sivakasi (R) (both-Jaya) #Mersal (R) (Zee) screened last week.

Raj &Mega opened accounts with #CBEMapillai & #Vishnu

Total during lock-down/summer: 41 pic.twitter.com/LNbUi03eai— Ajay Srinivasan (@Ajaychairman) April 16, 2020

Most Popular

Recent Comments