இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மாஸ்டர் படத்தில் தளபதி விஜய், முதல் முறையாக கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் புத்தாண்டு அன்று ரிலீஸ் ஆகவேண்டிய திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி போனது.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் முதல்முறையாக நடித்துள்ளார். இவரது முதல் படம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் க்கு டப்பிங் பேசியது பிரபல நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா என தெரிய வந்துள்ளது. சமந்தா, அமலா பால், எமி ஜாக்சன் போன்ற முன்னணி நடிகைளுக்கு ஏற்கனவே டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐ படத்தில் எமி ஜாக்சன் க்கு இவர் செய்த டப்பிங் பலராலும் பாராட்டு பெற்றது.