
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வீடுகளில் இருந்தபடியே சிக்கனமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். அதில் “இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும்” என தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கடைசியாக குறிப்பிட்ட இதுவும் கடந்து போகும் என்ற வாசகம் இணையத்தில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.