V4UMEDIA
HomeNewsKollywoodசூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி!

சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி!

பூமணியின் ‘வெக்கை’ நாவலை, தனுஷுடன் இணைந்து ‘அசுரன்’ எனும் சிறப்பான படமாக மாற்றிய வெற்றிமாறன், இப்போது செல்லப்பாவின் புகழ்பெற்ற ‘வாடி வாசல்’ நாவலை திரைப்படமாக இயக்க தயாராகிவிட்டார். இப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கதாநாயகி மற்றும் மீதமுள்ள நடிகர்கள் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படுவார்கள், மேலும் 2020 இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இன்று தமிழ் வருடப்பை முன்னிட்டு இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டையும், தனக்கும் இப்படத்தும் இருக்கும் சிறப்பு அம்சம் குறித்து வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு, ‘GV75′ சிறப்பானதாக இருக்கும் என்றும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்கான முன் பணிகள், ஏற்கனவே ஆடியோ வேலைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

#GV75 will be special .. pre work for #Vaadivaasal has already started for audio work … with my most powerful combination @VetriMaaran …. @Suriya_offl @theVcreations .. the sound will be unique 🔥👍— G.V.Prakash Kumar (@gvprakash) April 14, 2020

Most Popular

Recent Comments