ட்விட்டரில் தனது தினசரி வீடியோக்கள் மூலம் பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் சூரி, ஏற்கெனவே FEFSI ஊழியர்களின் நலனுக்காக ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்து, தனது ஹோட்டல் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறைகளை வழங்கியிருந்தார்.
இப்போது, அவர் FEFSI ஊழியர்களுக்கு உதவுவதற்காக 100 (25 கிலோ) அரிசி மூட்டையை நன்கொடையாக வழங்கியுள்ளார். அதையடுத்து, பலரும் இந்த நகைச்சுவை நடிகரின் உதவியை பாராட்டிவருகின்றனர்.