V4UMEDIA
HomeNewsKollywoodவிஷ்ணு விஷால் நடிக்கும் மோகன் தாஸ் படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு !

விஷ்ணு விஷால் நடிக்கும் மோகன் தாஸ் படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு !

வெண்ணிலா கபடி குழு, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால். எப்.ஐ.ஆர், காடன் படங்கள் ரிலீசிற்கு தயாராக உள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் இன்று (ஏப்ரல் 11) தனது அடுத்த படத்தின் தலைப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு மோகன் தாஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கொலை செய்து, பின்னர் அந்த ரத்த கறை படிந்த டீ-ஷர்ட் போட்டுள்ளார். இன்னோரு காட்சியில் 6பேக் உடற்கட்டுடன் தோன்றி மிரட்டியுள்ளார். மகாத்மா காந்தியின் முழு பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments