V4UMEDIA
HomeNewsKollywoodசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் உதவியாளராக பணியாற்றிய பிரபல நடிகர்!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் உதவியாளராக பணியாற்றிய பிரபல நடிகர்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கருடன் 2007 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் சிவாஜிக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் எந்திரன் படத்திற்காக இரண்டாவது முறையாக கைகோர்த்தார்.

2010 ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விஞ்ஞானி வசீகரன் மற்றும் ரோபோ சிட்டி மற்றும் ஆகிய இரு வேடங்களில் நடித்தார்.ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடன், வெளியான இப்படம் மிக பெரிய ஹிட் ஆனது.

படம் வெளியான பல வருடங்கள் கழித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படத்தின் தொடர்ச்சியான 2.0 படமும் வெளியான நிலையில், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ், எந்திரன் படத்தில் உதவியாளராக பணிபுரிந்தார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது, மனோஜ் எந்திரன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மனோஜ் இப்போது வெங்கட் பிரபு இயக்கும் சிம்புவின் மாநாடு என்ற படத்தில் தனது தந்தை பாரதிராஜா அவர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

#endhiran throw back @onlynikil @sureshkamatchi @kayaldevaraj @johnmediamanagr @offBharathiraja pic.twitter.com/sGVnPPgtFg— manoj k bharathi (@manojkumarb_76) April 10, 2020

Most Popular

Recent Comments